Friday, December 24, 2010

கெட்டிக்காரப் பிள்ளை.

அன்புக் கணவனே,

சுரக்காது என தெரிந்தும்
மலைகளைக் கடைந்து கடைந்து
களைத்தபின் - அன்றொருநாள்
பள்ளத்தாக்கில் நீர் பாய்ச்சிய வெள்ளத்தால்,

பாரும் உம் பிள்ளையை,
பத்து மாதங்களின் பின்னர்
மலைகளை கடையாமலேயே குடிக்கிறான்...!!!
உம்மை விட கெட்டிக்காரன்தான்.

Friday, November 26, 2010

கல்லறைக்கு கல்லறை...!

அமெரிக்க இராணுவத்தின் கல்லறை

ஆப்கான் தலிபான்களின் கல்லறை

ஈராக்கிய இராணுவத்தின் கல்லறை

ஈனப் பிறவிகள் சிங்களவரின் கல்லறை

எல்லாமே உயிருடன்தான் இருக்கின்றன

எம் வீர மறவர்களின் கல்லறைக்குத்தான்

கல்லறை கட்ட இடம் தேவைப்படுகிறது.

Wednesday, November 24, 2010

மகிந்தவின் ஆட்சிக்காலத்தில்...

கடந்த வருடம் ஆமிக்காரனால் கெடுக்கப்பட்டவள் - இன்று
தெருவோரத்தில் கைக்குழந்தையுடன் சோகமாய்

கடந்த மாதம் அதே ஆமிக்காரனால் கருவுற்றவள் - இன்று
துள்ளிக் குதிக்கிறாள் வயிற்றில் 3 வது குழந்தையுடன் சந்தோசமாய்

கெடுக்கப்பட்டவள் - அப்பாவித் தமிழ்ப் பெண்
துள்ளிக்குதிப்பவள் -  அந்த ஆமிக்காரனின் மனைவி.

------------------------------------------------------------------------------------------------
மகிந்தவின் புதிய சிந்தனை : இராணுவ வீரரின் 3 வது பிள்ளைக்கு ஒரு லட்சம் சன்மானம். 

உன்னாலே உன்னாலே...

முன் பின் தெரியாத உனக்கு நான் ஓர் ஆசான்
இப்படித்தான் தொடங்கிற்று நம் உறவு - நான்
படிப்பித்த பாடங்கள் உன்னில் பதிந்ததோ தெரியாது - ஆனால்
பாட நடுவில் நீ எழுதிய கவிதைகள் என்னில் நன்றாகவே பதிந்தது

உன் டயரியையும் கொடுத்து அதையும் படி என்றாய்
இன்னொருவர் டயரியை படிப்பதா? மனம் படபடத்தது
பரவாயில்லை படி என்றாய் - படித்தேன். பரவசமானேன்
துடித்த என் கையை அடக்க வேறு வழி தெரியவில்லை எனக்கு

இதோ ஒரே நாளில் மூன்றாவது படைப்பு - எல்லாமே
உன்னாலே உன்னாலே...!!!

நன்றிகள் !!!

உன் வரிகளைப் படித்த பின்புதான் உணர்ந்தேன்

தூங்கிக் கொண்டிருந்த சோம்பேறியை - அவனை

தட்டியெழுப்பிய நண்பியே - உனக்கு

ஆயிரமாயிரம் நன்றிகள்.

பிச்சைக்காரி

கணவனே கண்கண்ட தெய்வம்
பிள்ளையே நீ பெற்ற செல்வம்

அதெல்லாம் இருக்கட்டும்
அடுத்தவேளை சாப்பாட்டிற்கு 
பிச்சை போட்டுட்டு போங்கப்பா...