Saturday, November 12, 2011

சூரியனின் "காலை வணக்கம்"

சேவல்கள் சத்தமாய் கூவ,
பறவைகள் இனிதாய் கானமிசைக்க,
பூங்காற்று தென்றலாய் வீச,
தாலாட்டிய கடலலை போர்வைக்குள்ளிருந்து,
கதிர்களை நீட்டி சோம்பல் முறித்தபடி,
துயிலெழும் சூரியன் சொல்கிறான்,


"காலை வணக்கம்".



Saturday, April 2, 2011

லவ்வும் செருப்பும்...!


அழகான ரப்பர் செருப்பு
அதை அணிந்து வருது ஒரு பருப்பு
அது ஒரு கறுப்பு

நீ லவ்வைச் சொன்னதால்,

அவள் முகத்தில் ஒரு முறைப்பு
அவள் காலிலில்லை செருப்பு
அவள் கையில் ஒரு துடிப்பு

அடுத்த நொடி,

உன் கன்னத்தில் ஒரு புடைப்பு
உனக்கு இதுதான் பிழைப்பு
நீயெல்லாம் ஒரு படைப்பு???

Wednesday, March 9, 2011

தேவதையின் காதல்.


உன் முகம் அழகு
உன் கண்கள் அழகு
உன் உதடுகள் அழகு
உன் கழுத்து அழகு
உன் மார்பு அழகு
உன் இடை அழகு

உன் பேச்சு அழகு
உன் நடை அழகு
உன் நிழல் கூட அழகுதான்.
மொத்தத்தில் அழகிய தேவதை நீ -

போயும் போய் இவனையா காதலிக்கிறாய்?


Saturday, February 26, 2011

ஆண்களின் வேகம்

சைக்கிளில் செல்லும் ஆண்களின் வேகம்,

முன்னால் ஒரு பெண் சென்றுகொண்டிருந்தால்,
                        தானாக அதிகரிக்கும்.

அவளைக் கடந்த பின்னர்,
                        தானாக குறைந்துவிடும்.

முன்னால் இன்னொருத்தி சென்றால்,
                        மீண்டும் தானாக அதிகரிக்கும்.


Sunday, February 13, 2011

காதலர் தினம் இன்று மட்டும்தானா?

காலைக் கதிரவன் கண்விழிக்க
கடிகார அலாரம் கூப்பாடு போட
பஞ்சனையிலிருந்து எழுந்து பார்த்தேன்
பதினான்கு SMSகள் வந்திருந்தன

வலன்டையின் டேயாம் இன்று
விதம் விதமாய் வாழ்த்துக்கள் - ஆனால்
காதலனிடமிருந்து வரவில்லையே...
காதலர் தினம் இன்று மட்டும்தானா?

Heart Lock