Wednesday, May 22, 2013

திருஞான சம்பந்தர் தேவாரம் - புது விளக்கம்.

காதலாகி => காதல் கொண்டு
கசிந்து => காதல் தோல்வியில் வாடி
கண்ணீர் மல்கி => அழுது புரண்டு
ஓதுவார் தம்மை => புலம்புபவர்களை
நன்னெறி குய்ப்பது => மீள நல்வழிப்படுத்துவது
வேதம் நான்கினும் => நான்கு வேதங்களினதும்
மெய்ப்பொருளாவது => ஒரே கடவுளாகிய
நாதன் நாமம் => சிவபெருமானை குறிக்கும்
நமச்சிவாயவே => "நமச்சிவாய" எனும் மந்திரமே.

ஏக்கம்


"நட்பு"   எனும் மூன்றெழுத்துகளுடன் ஆரம்பித்து,
"காதல்"   எனும் மூன்றெழுத்துகளில் மூழ்கி
"காமம்"   எனும் மூன்றெழுத்துகளால்
"கன்னி"   எனும் மூன்றெழுத்துகளை இழந்தவள்
"மனைவி" எனும் மூன்றெழுத்துகளுக்காய் ஏங்குகிறாள்.

விதியின் விளையாட்டு.


ஒரு விஞ்ஞான கண்காட்சியில்
இரண்டு ஜோடி கண்கள் சந்தித்ததால்
மூன்று மாதங்களாய் வளர்ந்த நட்பு
நான்கு சந்திப்புகளுக்கு பின்னர்
ஐந்தாம் மாதத்தில் காதலாய் மலர்ந்து விட
ஆறாம் மாதத்தில் முத்தமிட தொடங்கி
ஏழாம் மாதத்தில் என்னென்னவோ செய்ய தொடங்கி
எட்டாம் மாதத்தில் கருவுற்றவள் - இன்னும்
ஒன்பது மாதங்கள் சுமக்கவேண்டி இருக்கையில்
பத்தாம் மாதத்தில் வீங்கிய வயிறால் பூதம் கிளம்ப
பதினோராம் மாதத்தில் கருக்கலைப்பும் தோற்றுப்போக
பன்னிரண்டாம் மாதத்தில் சண்டையிட்டு அவன் பிரிந்துவிட,

வாழ்க்கை முழுதும் அழுகிறாள் விதியின் ஒருவருட விளையாட்டை நினைத்து...!!!